search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவாக 100 விக்கெட் - ரஷித் கான் உலக சாதனை
    X

    விரைவாக 100 விக்கெட் - ரஷித் கான் உலக சாதனை

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 44 போட்டியில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனைப் படைத்துள்ளார். #WIvAFH
    ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். தனது அபார பந்து வீச்சால் சர்வதேச அளவில் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். 19 வயதான இவர் 2015-ம் ஆண்டு தனது 16 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். லெக்பிரேக் ஹுக்ளி பந்தால் பேட்ஸ்மேன்களை திணறடித்த ரஷித் கான் விக்கெட்டுக்களை அள்ளினார்.

    ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரஷித்கான், 26 போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தற்போது ஜிம்பாப்வேயில் உலகக்கோப்பை தகுதிச் சுற்று தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில 1 விக்கெட் வீழ்த்தினார்.



    இதன்மூலம் 44 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் இடது கை வேகபந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார். தற்போது ரஷித் கான் ஸ்டார்க் சாதனையை முறியடித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரஷித்கான், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×