search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்மர் அணியில் இருந்து விலகியது கடினமான தருணம்: பார்சிலோனா பயிற்சியாளர்
    X

    நெய்மர் அணியில் இருந்து விலகியது கடினமான தருணம்: பார்சிலோனா பயிற்சியாளர்

    பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு நெய்மர் சென்றது கடினமான தருணம் என பார்சிலோனா தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார். #Laliga #Neymar #Barcelona
    பிரேசில் கால்பந்து அணி கேப்டனான நெய்மர், பார்சிலோன அணிக்காக விளையாடி வந்தார். 2016-17 சீசனில் பார்சிலோனாவை பின்னுக்கு தள்ளி லா லிகா சாம்பியன் பட்டத்தை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியது. அத்துடன் சாம்பியன்ஸ் லீக் தொடரையும் கைப்பற்றியது. ஒரே வருடத்தில் இரண்டு சாம்பியன் பட்டத்தை பார்சிலோனா பறிகொடுத்தது.

    இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார். இதற்காக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் பீஸாக பார்சிலோனாவிற்கு வழங்கியது.



    இரண்டு சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்த நிலையில் அணியை வலுப்படுத்த நினைக்கையில் நெய்மர் வெளியேறியது கடினமான தருணம் என பார்சிலோனா தலைமை பயிற்சியாளர் எர்னெஸ்டோ வால்வெர்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்னெஸ்டோ வால்வெர்டு கூறுகையில் ‘‘நெய்மர் அணியில் இருந்து புறப்பட்டபோது பார்சிலோனா அணிக்கு மிகவும் கடினமான தருணமாக இருந்தது. இதை எங்களால் மறுக்க இயலாது.


    டெம்பெல்

    இருந்தாலும் பார்சிலோனா அணியின் ஒவ்வொரு வீரர்களும் மாறுபட்டவர்கள். எங்கள் அணியில் நெய்மருக்குப் பதிலாக வந்த ஓஸ்மான் டெம்பெல் முற்றிலும் மாறுபட்டவர். எந்தவொரு பொசிசனிலும் விளையாடக்கூடியவர். அதேவேளையில் வேகமாக ஓடக்கூடியவர். நாங்கள் மிகக்பெரிய அணியை பெற்றுள்ளோம்.

    தற்போது சிறந்த மாற்று வீரர்களை கொண்டு அணியை உருவாக்கியுள்ளோம். காயத்தில் இருந்து டெம்ப்ளே மீண்டும் அணிக்கு திரும்புவது சிறப்பான விஷயமாகும்’’ என்றார்.
    Next Story
    ×