search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்க ஈரான் வீராங்கனைகளுக்கு அனுமதி
    X

    சர்வதேச பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்க ஈரான் வீராங்கனைகளுக்கு அனுமதி

    சர்வதேச பளுதூக்குதல் போட்டிகளில் ஈரான் வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று அந்நாட்டு பளுதூக்குதல் பெடரேசன் தலைவர் தெரிவித்துள்ளார்.
    ஈரான் நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர்கள் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒலிம்பிக்கில் 7 முறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஆனால், பெண்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள, ஈரான் அனுமதித்ததில்லை. இதனால் பெண்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டது கிடையாது.

    இந்நிலையில் வரும் காலங்களில் பெண்கள் சர்வதேச பளுதூக்குதல் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று ஈரான் பளுதூக்குதல் பெடரேசன் தலைவர் அலி மொராதி தெரிவித்துள்ளார்.

    நாங்கள் ஈரான் பளுதூக்குதல் பெடரேசன் சார்பில் பெண்கள் கமிட்டி தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் திறமையான வீராங்கனைகளை பெற்றுள்ளோம். ஆண்களை போன்று அவர்களும் மிகப்பெரிய அளவில் சாதனைப் படைப்பார்கள்’’ என்றார்.
    Next Story
    ×