search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    200-வது ஒருநாள் போட்டியில் மலிங்கா: 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதிப்பாரா?
    X

    200-வது ஒருநாள் போட்டியில் மலிங்கா: 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதிப்பாரா?

    இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி மோதும் நாளைய முதல் ஒருநாள் போட்டி மலிங்காவிற்கு 200-வது போட்டியாகும். இதில் 300 விக்கெட் என்ற இலக்கை எட்டும் எதிர்பார்ப்பில் உள்ளார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் மலிங்காவிற்கு நாளை தம்புல்லாவில் நடைபெறும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 200-வது போட்டியாக இருக்கும்.

    இன்னும் 9 நாட்களில் 34 வயதைத் தாண்டும் மலிங்கா 199 போட்டியில் 298 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். நாளைய தனது 200-வது போட்டியில் 300 விக்கெட்டுக்கள் என்ற இலக்கை எட்டி சாதனைப் படைக்க இருக்கிறார்.



    34 வயதை தாண்ட இருக்கும் மலிங்கா இலங்கை அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டும், 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 298 விக்கெட்டும், 67 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி 89 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×