search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கில்கிறிஸ்டிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் பெவன்தான் கடினமான பவுலராம்
    X

    கில்கிறிஸ்டிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் பெவன்தான் கடினமான பவுலராம்

    அதிரடி மன்னன் ஆடம் கில்கிறிஸ்டிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் மைக்கேல் பெவன்தான் கடினமாக பவுலராக திகழ்ந்தார் என்று நினைவு கூர்ந்துள்ளார்.
    கிரிக்கெட் வரலாற்றில் 1995 முதல் 2010 வரையிலான காலத்தை எடுத்துக் கொண்டால் மறக்க முடியாத வீரர்களில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், மெக்கேல் பெவன் ஆகியோர் முக்கியமானவர்கள். விக்கெட் கீப்பர் பணியில் சிறந்து விளங்கிய கில்கிறிஸ்ட் பேட்டிங் அசுரனாக திகழ்ந்தார். உலகின் முன்னணி பந்து வீச்சாளர்களையெல்லாம் திணற வைத்தவர்.



    மைக்கேல் பெவன் சேஸிங்கில் மன்னாதி மன்னனாக திகழ்ந்தார். இவர் களத்தில் இறங்கிவிட்டால் பந்து வீச்சாளர்கள் பாடு திண்டாட்டம்தான். அவரை அவுட்டாக்கினால் மட்டுமே எதிரணி வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கினார்.



    மைக்கேல் பவனை எல்லோருக்கும் பேட்ஸ்மேனாகத்தான் தெரியும். ஆனால் இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் சிறப்பாக பந்து வீசும் திறமை கொண்டவர். இவர் பந்து வீசும்போதுதான் நான் விக்கெட் கீப்பராக செயல்படுவதில் கஷ்டப்படுவேன் என்று கில்கிறிஸ்ட் நினைவு கூர்ந்துள்ளார்.



    இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘பெவன் பந்து வீச்சால் புகழ்பெற்றவர் அல்ல. பேட்டிங் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தார். ஆனால், சில நேரம் முக்கியமான விக்கெட்டுக்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். விக்கெட் கீப்பரான எனக்கு அவருடைய இடது கை லெக்கி, பாஸ்ட் ஆக்சன் பந்தை எதிர்கொள்வது மிகக்கடினமாக இருந்தது. அந்த பந்தை ஸ்டம்பிற்கு பின்னால் நின்று பிடிப்பதற்கு சவாலானதாக இருந்தது’’ என்றார்.
    Next Story
    ×