என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரு புதுமுகங்கள்
Byமாலை மலர்28 Jun 2017 1:58 PM GMT (Updated: 28 Jun 2017 1:58 PM GMT)
இந்தியாவிற்கு எதிராக மீதமுள்ள மூன்று ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 13 பேர் கொண்ட அணியில் சுனில் அம்ப்ரிஸ், கைல் ஹோப் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கைல் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் ஹோப்பின் சகோதரர் ஆவார். இவர் இலங்கை ‘ஏ’ அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் டிரினிடாட் அண்டு டொபாகோ ரெட் போர்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
சுனில் மண்டல சூப்பர்50 ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதேபோல் பிசிஎல் முதல்தர போட்டிகளில் நன்றாக விளையாடி உள்ளார்.
இதனால் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜோனாதன் கார்ட்டர், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

Next Story
×