search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் பங்கேற்பு
    X

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டத்தில் என். ஸ்ரீனிவாசன் பங்கேற்பார் என்று தகவல் கூறுகின்றன.
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர், பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி தலைவர் என கிரிக்கெட்டின் பல்வேறு முன்னணி பொறுப்புகளை வசித்து வந்தவர் என். ஸ்ரீனிவாசன்.

    லோதா கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. லோதா கமிட்டி பரிந்துரையில் 70 வயதிற்கு மேற்பட்டோர் பதவியில் இருக்கக்கூடாது என்பதும் ஒன்று. இதனால் ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து தானகாவே விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    என்றாலும், பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக என். ஸ்ரீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் நிர்வாகக்குழுவில் உறுப்பினரை தக்கவைத்துள்ளார். இதன் மூலம் அவர் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் (ஜூன் 26-ந்தேதி) மும்பையில் பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பின் பிரிதிநிதியாக என். ஸ்ரீனிவாசன் கலந்து கொள்வார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு மாநில சங்க நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்திலும் ஸ்ரீனிவாசன் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×