என் மலர்

  செய்திகள்

  16 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய பால்பேட்மின்டன் போட்டி சென்னையில் 10-ந்தேதி தொடக்கம்
  X

  16 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய பால்பேட்மின்டன் போட்டி சென்னையில் 10-ந்தேதி தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செயின்ட் ஜோசப்ஸ் அகில இந்திய அழைப்பு பால்பேட்மின்டன் போட்டி வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றனர்.
  சென்னை:

  செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் அகில இந்திய அழைப்பு பால்பேட்மின்டன் (பூப்பந்து) போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

  இந்த ஆண்டுக்கான 9-வது செயின்ட் ஜோசப்ஸ் அகில இந்திய அழைப்பு பால்பேட்மின்டன் போட்டி வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

  இதில் தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., மேற்கு ரெயில்வே, தென்மத்திய ரெயில்வே, தென்கிழக்கு ரெயில்வே, கர்நாடகா, கேரளா, செயின்ட் ஜோசப்ஸ் உள்பட 16 அணிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.

  நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் இந்தப்போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.25 லட்சமாகும்.

  சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.35 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.25 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும்.
  Next Story
  ×