என் மலர்

  செய்திகள்

  பிரெஞ்ச் ஓபனில் சிமோனா ஹாலெப் ஆடுவது சந்தேகம்
  X

  பிரெஞ்ச் ஓபனில் சிமோனா ஹாலெப் ஆடுவது சந்தேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ருமேனியா டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபனில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
  பாரீஸ் :

  உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ருமேனியா டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப், கடந்த வாரம் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்தார்.

  காயத்துக்கு அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் வருகிற 28-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபனில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இது குறித்து 25 வயதான ஹாலெப் கூறுகையில், ‘எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையில் கணுக்கால் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பிரெஞ்ச் ஓபனுக்கு தயாராகுவதற்கு என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்கிறேன்.

  தற்போதைய நிலையில் இந்த போட்டிக்குள் நான் உடல்தகுதியை எட்டுவதற்கு 50 சதவீதம் அளவுக்கே வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
  Next Story
  ×