என் மலர்

  செய்திகள்

  ஆசிய பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் - தமிழக வீராங்கனை வைஷாலி தங்கம் வென்று அசத்தல்
  X

  ஆசிய பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் - தமிழக வீராங்கனை வைஷாலி தங்கம் வென்று அசத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில், தமிழக வீராங்கனை வைஷாலி தங்கம் வென்றார்.
  பீஜிங்:

  சீன தலைநகர் பீஜிங்கில் ஆசிய பிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சேர்ந்த வீராங்கனை வைஷாலி தங்கப்பதக்கம் வென்றார்.

  மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த தொடரில் வைஷாலி 7 சுற்றுகளில் வெற்றியும், இரண்டு சுற்றுகளை டிராவும் செய்து அசத்தினார்.

  இறுதி சுற்றில் மங்கோலியாவின் உர்ட்சைக் யூரிந்த்யுயா உடன் கடுமையாக போராடி ஆட்டத்தை டிரா செய்தார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

  தங்கம் வென்றுள்ளதன் மூலம் வைஷாலி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வைஷாலி தங்கப்பதக்கம் வென்றதால் அவரது குடும்பத்தினர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
  Next Story
  ×