என் மலர்
விளையாட்டு
- கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
- அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.
- விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரில் யார் சிறந்தவர் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
- கம்பீர் முற்றிலும் மாறுபட்ட பதிலை அளித்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர். இவர் தொடர்பாக அடிக்கடி செய்திகள் வருவது உண்டு. சில நாட்களுக்கு முன்னர் கூட ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பேட்டியில் யாரும் எதிர்ப்பார்க்க முடியாத வகையில் பதில் அளிப்பார்.
அதுபோன்று தற்போது ஒரு பேட்டியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு பதிலை அளித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
தி படா பாரத் ஷோவில் விவேக் பிந்த்ராவுடன் ஒரு நேர்காணலுக்காக கம்பீர் அமர்ந்திருந்தார். அவரிடம் இந்திய அணி இதுவரை தயாரித்த சிறந்த பேட்ஸ்மேன்கள் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கருத்து கேட்கப்பட்டது. மேலும், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களும் வழங்கப்பட்டன.
இருப்பினும், கம்பீர் முற்றிலும் மாறுபட்ட பதிலை அளித்தார். அவர் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கை தனது பதிலாகக் குறிப்பிட்டார்.
- இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.
- இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மினி ஏலப்பட்டியலில் ஸ்டார்க் பெயர் இடம்பெறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.
- இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டும் எடுத்தது.
- இலங்கை அணி தரப்பில் கேப்டன் சமாரி அத்தபத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இதில் நடந்த முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டும் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் சமாரி அத்தபத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியினர் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி கேப்டன் அத்தபத்து இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது மற்றும் தொடர்நாயகி விருதை வென்று அசத்தியுள்ளார்.
அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
- உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
- உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.
இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டில் 2-வது தடவையாக உலக கோப்பையை பெற்றோம்.
இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியா திணறி வருகிறது. இதனால் இந்த உலகக் கோப்பயை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார். 'சுவர்' என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டனான அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் உலகக்கோப்பை போட்டியோடு முடிவடைகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர் வரை டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கப்படலாம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
- 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.
- 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.
இஷான்கிஷன் 5-வது வரிசையில் இடம்பெற்றால் 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

4-வது வரிசையில் ஆடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் இடையே போட்டி இருக்கும். இஷான்கிஷன் பேட்ஸ்மேனாக களம் இறங்கினால் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார். ராகுலுக்கு சில கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது நல்லது.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது.
- 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
லாகூர்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள முதல்தான் நகரில் தொடங்கியது.
இந்திய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.
6 லீக் ஆட்டத்தில் 3 ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நடைபெற்றது. 3 போட்டிகள் இலங்கையில் நடந்தது. சூப்பர்-4 சுற்றின் 6 போட்டிகளில் முதல் ஆட்டம் பாகிஸ்தானில் நேற்று நடந்தது. சூப்பர்-4 சுற்றின் எஞ்சிய 5 ஆட்டங்களும், இறுதிப்போட்டியும் இலங்கையில் உள்ள கொழும்பில் நடக்கிறது.
ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது. 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்தியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) தெரிவித்துள்ளது.
இதற்கு இழப்பீடு கேட்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது.
இதுகுறித்து பி.சி.பி. அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஸ்ரப் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) தலைவர் ஜெய்ஷாவுக்கு இழப்பீடு கோரிக்கையை கோடிட்டு முறைப்படி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.சி.சி.யின் மற்ற நிர்வாக குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இடங்களை மாற்றுவதற்கான கடைசி நிமிட முடிவுகளை எடுத்ததற்கு யார் பொறுப்பு என்று அவர் தனது கடிததத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
போட்டிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த முக்கிய முடிவுகளில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எவ்வாறு பதில் அளிக்க போகிறது மற்றும் இழப்பீடு ஏதேனும் வழங்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
- 5 முறை இந்த விருதை ரொனால்டோ பெற்றுள்ளார்.
- ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார்.
வருடம் வருடம் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலோன் டி ஓர் விருதை பிபா வழங்கி வருகிறது. 1956 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை வாங்குவதில் 2007-ம் ஆண்டு முதல் மெஸ்சி மற்றும் ரொனால்டோவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் 60 (30 ஆண் மற்றும் பெண்) பேர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல உதவுவதில் முக்கிய பங்கு வகித்த லியோனல் மெஸ்ஸி இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இந்த பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளனர்.
இதில் போர்ச்சுகல் ஜாம்பவான் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறவில்லை. 5 முறை இந்த விருதை பெற்றுள்ள அவர் பெயர் இடம் பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார். அதனை தொடர்ந்து 2013, 2014, 2016, 2017 என கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட 2 வீரர்களை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது.
- இவர் இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சசித்ரா செனநாயகே கடந்த 2020-ம் ஆண்டு லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட 2 வீரர்களை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சூதாட்ட புகார் குறித்து விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு செனநாயகே 3 மாதத்துக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் செனநாயகே விளையாட்டு ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் நேற்று காலை சரண் அடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
38 வயதான சசித்ரா செனநாயகே இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
- அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
- இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 30 நிமிட நேரம் தேவைப்பட்டது.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 30 நிமிட நேரம் தேவைப்பட்டது.
அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை சந்திக்கிறார். 3-வது வரிசையில் இருக்கும் டேனில் மெட்வதேவ் (ரஷியா) கால்இறுதி ஆட்டத்தில் 6-4, 6-3, 6-4 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த 8-ம் நிலை வீரரான ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.
- ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
- இந்தியாவின் சுப்மன் கில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபாய்:
வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். 2-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்ஸி வான்டெர் டுசன் தொடருகிறார்.
மூன்றாவது இடத்தில் இந்தியாவின் சுப்மன் கில் உள்ளார். நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் கில் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். இதனால் 750 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் 3-வது இடம் பிடித்தார்.
இந்திய வீரர் விராட் கோலி 10-வது இடத்தில் தொடருகிறார்.
இஷான் கிஷன் பல்லேகலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் அடித்தார். இதன்மூலம் தரவரிசையில் 12 இடம் உயர்ந்து 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடமும், மிட்செல் ஸ்டார்க் 2-வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி முதல் இரண்டு ஆட்டங்களில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் 4 இடம் முன்னேறி 5-வது இடம் பிடித்துள்ளார். அதேசமயம் சக வீரர்களான ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 2 இடம் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதேபோல், டி20 போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் 3-வது இடத்திலும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது
- இதில் ரஷியாவின் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் செங் உடன் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.






