என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    • இதனால் அந்தப் போட்டி மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆசிய கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.

    நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி கொழும்புவில் பாகிஸ்தானை ச்சந்திக்கிறது. கொழும்புவில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால் லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் தடைப்பட்டது போல சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் தடைபட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

    இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (நடக்கும் இந்தியா, பாகிஸ்தான் சூப்பர்4 சுற்று ஆட்டத்திற்கு மட்டும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் (11-ம் தேதி) போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 291 ரன்கள் சேர்த்தது.
    • அந்த அணியின் கேப்டன் உள்பட4 பேர் அரை சதமடித்தனர்.

    கார்டிப்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் 72 ரன்னும், மலான் 54 ரன்னும், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் தலா 52 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே நியூசிலாந்து அதிரடியில் மிரட்டியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் கான்வே பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    அவருக்கு டேரில் மிட்செல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரும் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், நியூசிலாந்து 45.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கான்வே 111 ரன்னும், மிட்செல் 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. டேவன் கான்வேக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி தோற்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என கைப்பற்றியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்க

    ஜோடி அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றியது.

    இறுதியில், அமெரிக்க ஜோடி 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    13 ஆண்டுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று ந்டந்த அரையிறுதி போட்டிகளில் சபலென்கா, கோகோ காப் வென்றனர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, கோகோ காப் மோதுகின்றனர்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொண்டார்

    இதில் 0-6 என முதல் செட்டை இழந்த சபலென்கா, அடுத்த இரு செட்களில் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு அரையிறுதியில், அமெரிக்காவின் கோகா காப், கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகா காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, கோகோ காப் மோதுகின்றனர்.

    • அழைப்பின் பேரில் எம்.எஸ். டோனி டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாட சென்றதாக தகவல்.
    • முன்னதாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை எம்.எஸ். டோனி நேரில் கண்டுகளித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான எம்.எஸ். டோனி அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

    டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்ததன் பேரில் எம்.எஸ். டோனி கோல்ஃப் விளையாட சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி இருவரும் கோல்ஃப் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    முன்னதாக கார்லோஸ் அல்காராஸ் மற்றும் அலெக்சாண்டர் வெரவ் இடையே நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்று போட்டியை எம்.எஸ். டோனி நேரில் கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    எம்.எஸ். டோனி மற்றும் டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எம்.எஸ். டோனியின் நண்பர் ஹிதேஷ் சங்வி பகிர்ந்து இருக்கிறார். 

    • முக்கிய போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்ததாக ரசிகர்கள் ஆதங்கம்
    • அனைத்து போட்டிகளுக்குமான பொது டிக்கெட் விற்பனை என பிசிசிஐ தகவல்

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது.

    டிக்கெட் விற்பனை தொடங்கியதும் பெரும்பாலான போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்தன. பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஆன்லைன் விற்பனை இணைய தளம் மீது குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் அனைத்து போட்டிக்கான 2-ம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

    இன்று முதல் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. https://tickets.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

    அரையிறுதி, இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்து உரிய நேரத்தில் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் பேரார்வம், பங்களிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஐந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. அதேபோல் பெங்களூரு, டெல்லியில் நடைபெறும்  போட்டிகளுக்கான விக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

    • மீதமுள்ள சூப்பர்-4 சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெறுகிறது.
    • லீக் சுற்றில் இலங்கையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க வங்காள தேசம் முயற்சிக்கும்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான், இலங்கையில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின.

    ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. சூப்பர்-4 சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. லாகூரில் நடந்த இந்த சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் தோற்கடித்தது.

    அடுத்து மீதமுள்ள சூப்பர்-4 சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெறுகிறது.

    சூப்பர்-4 சுற்றில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வுனகா தலைமையிலான இலங்கை அணி, லீக் சுற்றில் தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    இதில் ஏற்கனவே வங்காளதேசத்தை வீழ்த்தியுள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும் இலங்கை அணியின் குசல் மென்டிஸ், நிசாங்கா, தனஞ்ஜெய டிசில்வா, அசலங்கா, ரஜிதா, தீக்ஷனா, பதிரனா ஆகிய வீரர்கள் உள்ளனர். லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை போராடியே வெற்றி பெற்றது.

    இதனால் அந்த அணி கூடுதல் கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம். சொந்த மண்ணில் விளையாடுவது இலங்கைக்கு சாதகமாக கருதப்படுகிறது. வுகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணி சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோல்வி அடைந்தால் அந்த அணிக்கு கடும் பின்னடைவு ஏற்படும்.

    வங்காள தேசம் அணியில் முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரகீம், லிட்டன்தாஸ், தவ்ஹீத் ஹரிதி, தங்தின் அகமது, ஹசன் மக்மூத் சோலபுல் இஸ்லாம் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    லீக் சுற்றில் இலங்கையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க வங்காள தேசம் முயற்சிக்கும். கடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இதனால் பேட்டிங்கில் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியமாகும்.

    இந்த ஆட்டம் நாளை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவர்களை பொறுத்தவரை எப்போதும் நம்மை விட அவர்கள் சிறந்தவர்கள் என்பதுதான் அவர்களது வழி.
    • உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.

    இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தொடர்பாக பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிபுணர்களின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று காட்டமாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, அவர்கள் (வெளிநாட்டு நிபுணர்கள்) தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளை பார்த்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. இந்திய அணியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வீரர்களையா தேர்வு செய்கிறோம்? இது எப்படி அவர்களது கவலையாக இருக்கும். இந்திய வீரர்கள் யாராவது ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்கிறார்களா? அது எங்களது வேலை இல்லை.

    கோலி, ரோகித் சர்மாவை விட பாபர் ஆசம் சிறந்தவர் என்று கூறுவார்கள். ஷாகின் ஷா அப்ரிடி சிறந்தவர், தெண்டுல்கரைவிட இன்சமாம்-உல்-ஹக் சிறந்தவர் என்று கூறினார்கள். அவர்களை பொறுத்தவரை எப்போதும் நம்மை விட அவர்கள் சிறந்தவர்கள் என்பதுதான் அவர்களது வழி.

    யார் 3-வது மற்றும் 4-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஓயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 49 ஒவரில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பவுமா 142 பந்தில் 114 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மார்கோ ஜான்சன் 32 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன், ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தனர்.

    தனி ஆளாகப் போராடிய லபுசேன் அரை சதம் பதிவு செய்தார். தொடர்ந்து ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், ஆஸ்திரேலியா 40.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லபுசேன் 80 ரன்னும், ஆஷ்டன் அகார் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, கோட்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.

    இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
    • நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.

    ஆம்ஸ்டர்டாம்:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற நெதர்லாந்து அணி தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அறிவித்துள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர். நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.

    நெதர்லாந்து அணி;- ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், ஷரிஸ் அஹ்மத் மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

    • கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
    • அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


    இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார். 

    ×