search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Open 2023"

    • கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
    • அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


    இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார். 

    • ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
    • சபலெங்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான அரினா சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    சபலென்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

    • இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது.
    • காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஜனிக் சின்னர் ஆகியோர் மோதினர். இதில் ஸ்வெரெவ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட்டை சின்னர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இதனையடுத்து நடந்த 3 செட்டை அலெக்சாண்டர் 6-2 என்ற கணக்கிலும் 4-வது செட்டை சின்னர் 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினர். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை அலெக்சாண்டர் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 6-3, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

    காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.

    • நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

    இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றில் தோற்றாலும் கூட முதல் இடத்திற்கு பிரச்சினை இல்லை.

    ×