search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் ராகுல் டிராவிட் நீடிப்பாரா?
    X

    உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் ராகுல் டிராவிட் நீடிப்பாரா?

    • உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டில் 2-வது தடவையாக உலக கோப்பையை பெற்றோம்.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியா திணறி வருகிறது. இதனால் இந்த உலகக் கோப்பயை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார். 'சுவர்' என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டனான அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் உலகக்கோப்பை போட்டியோடு முடிவடைகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.

    உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர் வரை டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கப்படலாம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×