என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் செங் உடன் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட், நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான், வங்காள தேசம் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய வங்காளதேசம் 38.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹிம் 64 ரன்களும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 53 ரன்களும் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் ஹல் உக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். முகமது ரிஸ்வான் 63 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 39.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • 2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது.
    • உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் போட்டிக்கான அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனையில் நான்கு லட்சம் டிக்கெட்கள் விற்பனைக்கு திறக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது. ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளுக்கான டிக்கெட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதை பி.சி.சி.ஐ. உணர்ந்து கொண்டுள்ளது.

    மாநில கூட்டமைப்புகளுடன் ஆலோசனைகளை முடித்த பிறகு, சுமார் நான்கு லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் முடிந்தவரை அதிக ரசிகர்களுக்கு டிக்கெட்களை விற்பனை செய்யவும், அவர்களை முடிந்தவரை வரலாற்று சிறப்புமிக்க தொடரில் கலந்து கொள்ள செய்ய முடியும்.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான போட்டிகளுக்கு பொது பிரிவு டிக்கெட் விற்பனை செப்டம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. ரசிகர்கள் https://tickets.cricketworldcup.com. வலைதளத்தில் வாங்கிட முடியும். அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் இதே போன்று குறுகிய காலக்கட்டத்தில் அறிவிக்கப்படும்.

    2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • ஜிஹுய் 211 கிலோ (95 கிலோ+116 கிலோ) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
    • அமெரிக்காவின் ஜோர்டன் டெலாக்ரூஸ் 200 கிலோ (88 கிலோ + 112 கிலோ) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் க்ளீன் அண்ட் ஜெர்க் உலக சாதனையை சீன லிஃப்ட் வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்தார்.

    2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில், பெண்களுக்கான 49 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 119 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார். தற்போது இந்த சாதனையை 120 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனையான ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    சீனாவின் மற்றொரு வீராங்கனையான ஹூ ஜிஹுய் ஸ்னாட்ச் பிரிவிலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் (95 கிலோ +120 கிலோ) 215 கிலோ எடையை தூக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இது முந்தைய சாதனையை (213 கிலோ) விட இரண்டு கிலோகிராம் அதிகமாகும்.

    ஹுய்ஹுவா ஸ்னாட்ச் முறையில் 95 கிலோ எடையைத் தூக்கி மார்க்கீ நிகழ்வில் முதலிடம் பெற்றார். ஜிஹுய் 211 கிலோ (95 கிலோ+116 கிலோ) இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அமெரிக்காவின் ஜோர்டன் டெலாக்ரூஸ் 200 கிலோ (88 கிலோ + 112 கிலோ) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    எடை பிரிவில் முன்னணியில் இருக்கும் சானு, இந்த மாத இறுதியில் தொடங்கவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்துவதால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து சானு விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    • அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார்.

    லாகூர்:

    6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகளின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணி மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக நைம் - ஹசன் மிர்ஷா களமிறங்கினர். அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார். அடுத்த ஓவரை நசீம் ஷா வீசினார். இவர் வீசிய முதல் பந்தில் ஹசன் மிர்ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து நைம் மற்றும் தாஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் லிட்டன் தாஸ் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நைம் 7-வது ஓவரில் ஹரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    10-வது ஓவரின் முதல் பந்தில் தௌஹித் ஹிரிடோய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், அப்ரிடி, நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    • 35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
    • முதல் முறையாக பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    பிரசிடென்சி கிளப் சார்பில் சர்வதேச மூத்தோர் (வெடன்ஸ்) ஐ.டி.எப். டென் னிஸ் போட்டி சென்னையில் வருகிற 11-ந்தேதி தொடங்கு கிறது. 16-ந்தேதி வரை பிரசி டென்சி கிளப் மற்றும் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடி யம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒற்றையர், இரட்டையர் பிரிவில் நடைபெறுகிறது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கி றார்கள். இதுவரை 90-க் கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். முதல் முறையாக பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    சர்வதேச டென்னிஸ் சங்கம், அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் நடத்தும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2.10 லட்சமாகும்.

    மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் கே.சிவராம் செல் வக்குமார் போட்டி இயக்குனர் ஹிட்டன ஜோஷி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.
    • குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் ஆதிக்கம் உள்ளது.

    கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன், ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உலகக் கோப்பை அணியில் உள்ளனர்.

    குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேரும் (ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 2 வீரர்களும் (விராட் கோலி, முகமது சிராஜ்), டெல்லி கேப்பிடல்சில் 2 பேரும் (அக்ஷர் படேல், குல்தீப் யாதவ்), லக்னோ (கே.எல்.ராகுல்), சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜடேஜா) அணிகளில் தலா ஒருவரும் உலகக் கோப்பைக்கு தேர்வாகி உள்ளனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.

    • பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
    • சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதுகிறது.

    6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காள தேசம் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    • பென் ஷெல்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக கரோலினா முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபோவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 6-2, 3-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டன், பிரான்சிஸ் தியாபோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    அரையிறுதி சுற்றில் பென் ஷெல்டன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.

    இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் சொரானா சிர்ஸ்டியா - கரோலினா முச்சோவா மோதின. இந்த ஆட்டத்தில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக இவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபனில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது.
    • பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது. 



    'பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்' என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது. ஆனால் அவர் கடந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி இதனை முகப்பு படமாக வைத்திருப்பதே உண்மை நிலவரம் ஆகும். அப்போது முதல் தற்போது வரை டோனி தனது முகப்பு படத்தை மாற்றாமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

    ஆசிய தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 291 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இதனை இருமுறை செய்துள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது.

    இலங்கை அணி முதன் முறையாக இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

    இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

    • ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுக்கலாம்.
    • சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது ஆப்கானிஸ்தானுக்கு தெரியவில்லை.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 37.4 ஓவரில் 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஆட்ட அதிகாரிகளால் ரன்ரேட் குறித்த சரியான கணக்கீடுகள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆப்கானியர்கள் கூறினர்.

    37 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. சூப்பர் சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் நுழைய ஒரு பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என்ற தகவல் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. 37-வது ஓவரின் முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் தூக்கி அடித்து பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இதனால் நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்த ரஷித் கான் போட்டி முடிந்து விட்டது என சோகத்தில் இருந்தார்.

    ஆனாலும் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுத்தால் கூட ஆப்கானிஸ்தான் ரன்ரேட் அதிகமாகி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். இந்த தகவலை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ட்ராட் கூறியுள்ளார்.

    இது குறித்து ட்ராட் கூறியதாவது:-

    கூறப்பட்ட நிபந்தனைகளை அதிகாரிகள் தனது அணிக்கு தெரிவிக்கவில்லை. அந்த கணக்கீடுகள் எங்களுக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் 37.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் 295 அல்லது 297 ரன்களைப் பெறலாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 

    ×