search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை - வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    ஆசிய கோப்பை - வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட், நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான், வங்காள தேசம் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய வங்காளதேசம் 38.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹிம் 64 ரன்களும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 53 ரன்களும் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் ஹல் உக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். முகமது ரிஸ்வான் 63 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 39.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    Next Story
    ×