என் மலர்
நீங்கள் தேடியது "World Weightlifting Championships"
- ஜிஹுய் 211 கிலோ (95 கிலோ+116 கிலோ) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
- அமெரிக்காவின் ஜோர்டன் டெலாக்ரூஸ் 200 கிலோ (88 கிலோ + 112 கிலோ) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் க்ளீன் அண்ட் ஜெர்க் உலக சாதனையை சீன லிஃப்ட் வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்தார்.
2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில், பெண்களுக்கான 49 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 119 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார். தற்போது இந்த சாதனையை 120 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனையான ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் மற்றொரு வீராங்கனையான ஹூ ஜிஹுய் ஸ்னாட்ச் பிரிவிலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் (95 கிலோ +120 கிலோ) 215 கிலோ எடையை தூக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இது முந்தைய சாதனையை (213 கிலோ) விட இரண்டு கிலோகிராம் அதிகமாகும்.
ஹுய்ஹுவா ஸ்னாட்ச் முறையில் 95 கிலோ எடையைத் தூக்கி மார்க்கீ நிகழ்வில் முதலிடம் பெற்றார். ஜிஹுய் 211 கிலோ (95 கிலோ+116 கிலோ) இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அமெரிக்காவின் ஜோர்டன் டெலாக்ரூஸ் 200 கிலோ (88 கிலோ + 112 கிலோ) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
எடை பிரிவில் முன்னணியில் இருக்கும் சானு, இந்த மாத இறுதியில் தொடங்கவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்துவதால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து சானு விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக வலுதூக்கும் (பவர் லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடைபெற்றது.
- ஜூனியர் பிரிவில் 48 கிலோ உடல் எடை பிரிவில் கஸ்தூரி பங்கேற்றார்.
சென்னை:
உலக வலுதூக்கும் (பவர் லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள நோவோசிர்ஸக் நகரில் கடந்த 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். ஜூனியர் பிரிவில் 48 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற அவர் தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் பெஞ்ச் மற்றும் டெட்லிப்ட் முறையில் மொத்தம் 105 கிலோ தூக்கி முதல் இடத்தை பிடித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த அவர் ரஷியாவில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பினார். தங்கம் வென்ற கஸ்தூரிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மாவட்ட வலுதூக்கும் சங்க பொதுச்செயலாளர்கள் எஸ்.பகவதி மூத்த துணைத்தலைவர், எஸ்.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறவினர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். சொந்த ஊரில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






