என் மலர்
நீங்கள் தேடியது "Ben Shelton"
- இறுதிப்போட்டியில் பென் ஷெல்டன் (அமெரிக்கா), ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார்.
- இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவ் கைப்பற்றினார்.
டொராண்டோ:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீரர்களான பென் ஷெல்டன் (அமெரிக்கா), ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவ் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த இரு செட்களில் ஆதிக்கம் செலுத்திய பென் ஷெல்டன் 6-4, 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- பென் ஷெல்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக கரோலினா முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபோவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் 6-2, 3-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டன், பிரான்சிஸ் தியாபோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அரையிறுதி சுற்றில் பென் ஷெல்டன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.
இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் சொரானா சிர்ஸ்டியா - கரோலினா முச்சோவா மோதின. இந்த ஆட்டத்தில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக இவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபனில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.






