என் மலர்
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்
- இறுதிப்போட்டியில் பென் ஷெல்டன் (அமெரிக்கா), ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார்.
- இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவ் கைப்பற்றினார்.
டொராண்டோ:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீரர்களான பென் ஷெல்டன் (அமெரிக்கா), ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவ் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த இரு செட்களில் ஆதிக்கம் செலுத்திய பென் ஷெல்டன் 6-4, 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
Next Story






