என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

ஒருநாள் போட்டி தரவரிசை - 3ம் இடத்துக்கு முன்னேறினார் சுப்மன் கில்

- ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
- இந்தியாவின் சுப்மன் கில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபாய்:
வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். 2-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்ஸி வான்டெர் டுசன் தொடருகிறார்.
மூன்றாவது இடத்தில் இந்தியாவின் சுப்மன் கில் உள்ளார். நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் கில் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். இதனால் 750 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் 3-வது இடம் பிடித்தார்.
இந்திய வீரர் விராட் கோலி 10-வது இடத்தில் தொடருகிறார்.
இஷான் கிஷன் பல்லேகலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் அடித்தார். இதன்மூலம் தரவரிசையில் 12 இடம் உயர்ந்து 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடமும், மிட்செல் ஸ்டார்க் 2-வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி முதல் இரண்டு ஆட்டங்களில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் 4 இடம் முன்னேறி 5-வது இடம் பிடித்துள்ளார். அதேசமயம் சக வீரர்களான ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 2 இடம் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதேபோல், டி20 போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் 3-வது இடத்திலும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.