search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் அறிமுகம்
    X

    சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் அறிமுகம்

    சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சுசுகி நிறுவனம் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் விரைவில் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விசேஷ ரெட் நிற பெயின்ட் செய்யப்பட்டிருக்கும் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷனில் அழகிய கருப்பு நிற ரேசிங் டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் ஹேட்ச்பேக் மாடலில் வெளிப்புற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளது. டெவில் ரெட் நிற பெயின்ட் காரின் தோற்றத்தை மேம்படுத்தி, மிகவும் கம்பீரமாக வெளிப்படுத்துகிறது. 

    இதன் வெளிப்புறங்களி் கருப்புி நிற டீக்கல்கள் காரின் தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. பொனெட், ஹெட்லேம்ப் டிப் மற்றும் முன்புறம், பின்பக்க ஓவர்ஹேங்களில் கருப்பு நிற டீக்கல்களை பார்க்க முடிகிறது. இத்துடன் காரின் முன்பக்கம் கருப்பு நிற பம்ப்பர்களும் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய சுசுகி ஸ்விஃப்ட் கார் ஆஸ்திரேலியாவில் ஜூலை மாத வாக்கில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை வரியில்லாமல் AUD 29,156 (இந்திய மதிப்பில் ரூ.14.81 லட்சம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காரின் உள்புறம் சார்ந்த முழு விவரங்கள் அறியப்படாத நிலையில், வழக்கமான ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற அம்சங்களே புதிய காரிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. வழக்கமான ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் உள்புறத்தில் டேஷ்போர்டு, சென்ட்டர் கன்சோல் மற்றும் சைடு ஆரம்ரெஸ்ட் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சீட்களில் சிவப்பு நிற ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் மாடலில் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 138 பிஹெச்பி பவர், 230 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×