search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெற்றிகரமாக விண்ணில் பறந்தது தேஜாஸ் எம்கே1ஏ போர் விமானம்
    X

    வெற்றிகரமாக விண்ணில் பறந்தது தேஜாஸ் எம்கே1ஏ போர் விமானம்

    • இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானம்.
    • இந்த சோதனை போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு:

    இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.

    தேஜாஸ் எம்.கே.1ஏ என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் இலகுரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

    இந்நிலையில், இதன் முதல் விமானம் எல்.ஏ.5033 இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விமான தளத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு விண்ணில் பறந்தது.

    தலைமை பயிற்சி பைலட், குரூப் கேப்டன் கே.கே.வேணுகோபால் (ஓய்வு) விமானத்தை ஓட்டினார். 18 நிமிடங்கள் வானில் பறந்து வட்டமடித்து பின்னர் தரையிறக்கினார். இந்தச் சோதனையானது போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது

    ஒரே நேரத்தில் விமானத்தை வடிவமைத்து உற்பத்தி செய்வதற்கான முக்கிய மைல்கல்லை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் அடைந்திருக்கிறது.

    தேஜாஸ் எம்.கே.1ஏ விமானத்தில் மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார், தகவல் தொடர்பு அமைப்புகள், கூடுதல் தாக்குதல் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்கள் உள்ளன.

    Next Story
    ×