search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டீசல் தீர்ந்து போனதால் நின்றது- ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் சாலையோரம் குழந்தை பெற்ற பெண்
    X

    டீசல் தீர்ந்து போனதால் நின்றது- ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் சாலையோரம் குழந்தை பெற்ற பெண்

    • பெண்ணுக்கு கிட்டத்தட்ட 4 வாரங்களுக்கு முன்பாகவே பிரசவம் நடைபெற்றுள்ளது.
    • தாயும், குழந்தையும் அருகிலுள்ள சமுதாய நல மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் துளசிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கா மணி. பழங்குடியின பெண்ணான இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சை அழைத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது டீசல் தீர்ந்து விட்டதால் இதனால் சரியான நேரத்திற்குள் வர இயலவில்லை.

    மேலும் 4 மணி நேரமாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

    நேரம் கடந்துசெல்ல கங்காமணியின் பிரசவ வலியும் அதிகரித்துக்கொண்டே போனது.

    இதைத் தொடர்ந்து சாலையோரத்தில், தன்னுடன் வந்த பெண்ணின் உதவியுடன் அவருக்கு பிரசவம் நடைபெற்றது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    அதன்பின்னரே ஆம்புலன்ஸ் வந்தது. தொடர்ந்து குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்பட்டது.

    தாயும், குழந்தையும் அருகிலுள்ள சமுதாய நல மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம், தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து நிர்மல் மாவட்ட கலெக்டர் வருண் ரெட்டி கூறும்போது,

    கடைக்கோடியில் உள்ள பெண்ணின் அவரது கிராமத்திற்கு எளிதாக போய் சேர்வதற்கு வசதி இல்லை.

    வழக்கமாக கர்ப்பிணிகளை முன்கூட்டியே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்ப்போம்.

    ஆனால் இந்தப் பெண்ணுக்கு கிட்டத்தட்ட 4 வாரங்களுக்கு முன்பாகவே பிரசவம் நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்துவிட்டது.

    ஆனால் அதற்குள் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது. எனவே அங்கேயே அவருக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

    தற்போது தாயும், குழந்தையும் கானாப்பூர் சமுதாய நல மையத்தில் நலமுடன் உள்ளனர்" என்றார்.

    Next Story
    ×