search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்
    X

    6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்

    • பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை காதல் மொழியில் பேசி வலையில் வீழ்த்தியுள்ளார்.
    • பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    புவனேஸ்வர்:

    நான் அவனில்லை சினிமாவில் நடிகர் ஜீவன் தொழில் அதிபர் போல் நடித்து காதல் வலை வீசி 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுப்பட்டிப்பார்.

    அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் காஷ்மீரை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணுவ டாக்டர், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி என்று நடித்து காஷ்மீர், உத்தரபிரதேசம், மகாஷ்டிரா, ஒடிசாவை சேர்ந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

    மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவை சேர்ந்தவர் இஷான் புஹாரி (வயது37). இவர் ஒடிசாவில் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் நீல்பூர் கிராமத்தில் பொது மக்களை ஏமாற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சிறப்பு அதிரடி படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    இஷான் புஹாரி ராணுவ டாக்டர் என்றும், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி என்றும் ஏமாற்றி வந்துள்ளார்.

    காஷ்மீர், உத்தரபிரதேசம், மகராஷ்டிரா, ஒடிசாவை சேர்ந்த 6 பெண்களை தான் ஒரு அதிகாரி மற்றும் டாக்டர் என்றும் கூறி அவர்களை மயக்கி திருமணம் செய்துள்ளார்.

    மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை காதல் மொழியில் பேசி வலையில் வீழ்த்தியுள்ளார்.

    சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் அவரிடம் அமெரிக்காவில் உள்ள சிறந்த ஐவி லீக் கல்லூரியான கார்னெல் பல்கலைக் கழகத்தில் படித்தது போல் போலி மருத்துவ சான்றிதழும், அதே போல் வேலூர் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்தது போல் போலி மருத்துவ சான்றிதழும் வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவரது கைது குறித்து சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. பங்கஜ் கூறியுள்ளதாவது:-

    காஷ்மீரில் மோசடி வழக்கில் சிக்கிய இவர் மீது ஏற்கனவே ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் நெருங்கிய தொடர்பு உள்ளதும், கேரளாவில் சில அமைப்பி னருடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அவருக்கு பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் பாகிஸ்தான் உளவாளியாக கூட இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

    இதுதொடர்பாக கைதான இஷான் புஹாரிடம் பஞ்சாப், காஷ்மீர் மற்றும் ஒடிசா மாநில போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×