என் மலர்

  இந்தியா

  பெங்களூருவில் மாணவியுடன் முத்தப்போட்டி: கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது
  X

  பெங்களூருவில் மாணவியுடன் முத்தப்போட்டி: கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு மாணவனுக்கு சிறுமி மீது வெறுப்பு ஏற்பட்டதால் முத்த வீடியோவை அவன் சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளான்.
  • அந்த கிளிப்பிங்கை கல்லூரியின் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

  பெங்களூரு:

  கர்நாடக மாநிலம் மங்களூருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிரபல கல்லூரியில் படிக்கும் சிறுவனும், சிறுமியும் தனது வகுப்புத் தோழர்கள் 2 பேருடன் சேர்ந்து மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ளனர்.

  பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்கள். இதனிடையே அதில் ஒரு மாணவனுக்கு சிறுமி மீது வெறுப்பு ஏற்பட்டதால் அந்த வீடியோவை அவன் சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளான். அந்த கிளிப்பிங்கை கல்லூரியின் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

  அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது கல்லூரி பேராசிரியர் ஒருவரது வாட்ஸ்அப்புக்கும் சென்றது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்யப்பட்டது. கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி சில மாணவர்களை சஸ்பெண்டு செய்தது.

  இதனிடையே இதுபற்றி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 8 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 8 பேரையும் கைது செய்தனர். இந்த 8 பேரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376, 354, 354 (சி) மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக மங்களூரு வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும், சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 4, 8, 12, 13, 17 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவுகள் 66 (இ) மற்றும் 67 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×