என் மலர்

  இந்தியா

  மும்பையில் அதிகரிக்கும் தொற்று- இந்தியாவில் புதிதாக 18,738 பேருக்கு கொரோனா
  X

  மும்பையில் அதிகரிக்கும் தொற்று- இந்தியாவில் புதிதாக 18,738 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 18,558 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பினர்.
  • இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 110 ஆக உயர்ந்தது.

  புதுடெல்லி:

  நாடு முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,311, மகாராஷ்டிராவில் 1,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 486 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை பாதிப்பு 286 ஆக இருந்த நிலையில், ஒரு வாரத்தில் பாதிப்பு இரு மடங்கு வரை உயர்ந்துள்ளது.

  எனவே மும்பையில் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி தொற்று பரவலை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

  கர்நாடகாவில் 1,694, கேரளாவில் 1,113, தமிழ்நாட்டில் 1,094 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 45 ஆயிரத்து 100 ஆக உயர்ந்தது.

  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 18,558 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 110 ஆக உயர்ந்தது.

  தற்போது 1,34,933 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 140 அதிகம் ஆகும்.

  தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 40 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,689ஆக உயர்ந்துள்ளது.

  Next Story
  ×