search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் லோக் அதாலத் மூலம் இணைந்த 120 தம்பதிகள்
    X

    விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் லோக் அதாலத் மூலம் இணைந்த 120 தம்பதிகள்

    • கர்நாடக மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 34 ஆயிரத்து 620 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வருவாய்த்துறை தொடர்பாக 94 ஆயிரத்து 446 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்ட சேவைகள் ஆணைய தலைவர் நீதிபதி வீரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 34 ஆயிரத்து 620 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 596 வழக்குகள் கோர்ட்டுக்கு வராத பிரச்சினைகள் ஆகும். போக்குவரத்து விதிமீறலில் மட்டும் அபராதம் ரூ.1,000 கோடி நிலுவையில் உள்ளது. இதுபோன்ற வழக்குகள் தான் லோக்அதாலத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. 2.46 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்கில் ரூ.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

    வருவாய்த்துறை தொடர்பாக 94 ஆயிரத்து 446 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வங்கி கடன் தொடர்பாக 8 ஆயிரத்து 571 வழக்குகளில் ரூ.25.80 கோடி திரும்ப பெறப்பட்டது. மின் கட்டண பாக்கி தொடர்பாக 95 ஆயிரத்து 756 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதன் மூலம் ரூ.13.58 கோடி கட்டண பாக்கி வசூலிக்கப்பட்டது. குடிநீர் கட்டண பாக்கி தொடர்பாக 78 ஆயிரத்து 716 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13.86 கோடி வசூலிக்கப்பட்டன.

    1,380 குடும்ப தகராறு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. பிரிந்திருந்த 120 தம்பதிகள் லோக்அதாலத் மூலம் ஒன்றாக இணைந்தனர்.

    இவ்வாறு வீரப்பா கூறினார்.

    Next Story
    ×