search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பணியில் இருந்த போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த பெண்
    X

    பணியில் இருந்த போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த பெண்

    • வீடியோவில், இளம்பெண் ஒருவர், சீருடையில் இருந்த போலீஸ்காரரின் கன்னத்தில் பளார் என அடிக்கிறார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் சம்பந்தப்பட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    டெல்லியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் டுவிட்டரில் பரவி வருகிறது. கர்காலேஸ் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர், சீருடையில் இருந்த போலீஸ்காரரின் கன்னத்தில் பளார் என அடிக்கிறார். இதனால் அந்த போலீஸ்காரர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். அதன்பிறகும் தொடர்ந்து அந்த காவலரை பெண் தாக்குவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

    இதை அங்குள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் அந்த பெண்ணிடம் தாக்குவதை நிறுத்துமாறு எச்சரிக்கை செய்தனர். ஆனாலும் அந்த பெண் அதை கண்டு கொள்ளாமல் காவலரை தொடர்ந்து தாக்குவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வையை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் சம்பந்தப்பட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×