search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் ரெயில் விபத்து.. சேதமடைந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டன
    X

    பீகார் ரெயில் விபத்து.. சேதமடைந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டன

    • பீகார் ரெயில் விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு.
    • ரெயில் விபத்து காரணமாக பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரெயில் விபத்து ஏற்பட தண்டவாளத்தில் இருந்த குறைபாடு தான் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. இதுதவிர ரெயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென ரெயிலை நிறுத்துவதற்கு பிரேக்-ஐ அழுத்தியதால், ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ரெயில் தடம் புரண்டதால் சேதமைடந்த தண்டவாளங்கள் முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டதாக மூத்த ரெயில்வே அதிகாரி தெரிவித்து உள்ளார். தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, இன்று மாலை 5.12 மணிக்கு ரெயில்கள் பயணிக்க துவங்கியுள்ளது.

    எனினும், தற்போதைக்கு குறைந்த அளவிலேயே ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரி தெரிவித்து உள்ளார். மேலும் ரெயில் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை மேற்பார்வை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×