search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டசபை தேர்தல் 3 மணி நிலவரம்: சத்தீஸ்கரில் 55.31, ம.பி.யில் 60.52 சதவீத வாக்குகள் பதிவு
    X

    சட்டசபை தேர்தல் 3 மணி நிலவரம்: சத்தீஸ்கரில் 55.31, ம.பி.யில் 60.52 சதவீத வாக்குகள் பதிவு

    • மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    இதேபோல், சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 38.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், மத்திய பிரதேசத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 45.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சத்தீஸ்கரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு 55.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், மத்திய பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×