search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மழை
    X
    மழை

    கேரளாவில் 1-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

    ஜூன் 1-ந்தேதி ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வருகிற 1-ம்தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி பகுதிகளில் நாளை (30-ந்தேதி)யும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் 31-ந் தேதியும், ஜூன் 1-ந்தேதி ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசும். 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை கனமழை பெய்யும். மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இடி-மின்னல்களின் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களை எச்சரித்து உள்ளது.

    கனமழையின் காரணமாக மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×