என் மலர்

  இந்தியா

  தண்ணீரில் மூழ்கி பலி
  X
  தண்ணீரில் மூழ்கி பலி

  மகாராஷ்டிராவில் சோகம் - அணையில் குளிக்கச் சென்ற இளம்பெண்கள் உள்பட 8 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிராவில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி 8 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  மும்பை:

  மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் பொஹர் தாலுகா நரிஹான் என்ற கிராமத்தில் நேற்று நடந்த குடும்ப நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் மாலை அப்பகுதியில் உள்ள பஹதர் அணையில் சில பெண்கள் குளிக்கச் சென்றனர். அணையில் குளித்துக் கொண்டிருந்தபோது 5 பெண்கள் தண்ணீரின் வேகத்தில் மூழ்கியும், இழுத்தும் செல்லப்பட்டனர்.

  தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அணை அமைந்துள்ள பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களில் 4 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய ஒரு பெண்ணை தேடி வருகின்றனர்.

  இதேபோல், புனேவில் உள்ள சாஸ்காமான் அணைக்கு குளிக்கச் சென்ற மாணவர்களில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
  Next Story
  ×