search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அஸ்வினி குமார் சௌபே
    X
    அஸ்வினி குமார் சௌபே

    இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை- மத்திய மந்திரி நம்பிக்கை

    நாம் அனைவரும் இந்தியராக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும், மத்திய மந்திரி அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    பாரத் நிதி அமைப்பு ஐதராபாத்தில் ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் இந்து மாநாட்டின் 10வது பதிப்பில் பங்கேற்று பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளதாவது:

    இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. இந்து என்ற வார்த்தையை வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நாம் ஒருபோதும் கட்டுப்படுத்தக் கூடாது. 

    இந்து என்பது புவியியல் அடையாளம். இமயமலைக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். நமது நாடு அறிவு பூமி என்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 

    நாம் அனைவரும் இந்தியராக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும். உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த ஜனநாயக நாட்டிற்கு 
    இந்தியா ஒரு எடுத்துக்காட்டு. 

    நாங்கள் எங்கள் நாட்டை எங்கள் தாயாகக் கருதுகிறோம், இந்தியாவை பாரத மாதா என்று குறிப்பிடுகிறோம். இதுவே எங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    நிகழ்ச்சியில்  பாஜக மூத்த தலைவர் முரளிதர் ராவ், அக்கட்சியின் எம்பி மனோஜ் திவாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×