search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் வன்முறை நடந்த பகுதியில் போலீஸ் குவிப்பு
    X
    டெல்லியில் வன்முறை நடந்த பகுதியில் போலீஸ் குவிப்பு

    டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது கல்வீச்சு- போலீசார் உள்பட பலர் படுகாயம்

    அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் வெடித்து. 

    மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

    இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப் பட்டன. கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.  

    சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மோதல் நடைபெற்ற   ஜஹாங்கீர்புரி பகுதியில் காவல்துறையினரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது

    Next Story
    ×