search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மந்திரி ஹர்தீப் சிங் பூரி
    X
    மந்திரி ஹர்தீப் சிங் பூரி

    உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பத்தில் ஒரு பங்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது - மத்திய அரசு

    கடந்த நான்கரை மாத காலத்துக்கு பின், எரிபொருள் விலை 13-வது முறையாக இன்று விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

    ஏப்ரல் 2021 மற்றும் மார்ச் 22-க்கு இடையிலான காலகட்டத்தில், அமெரிக்கா எரிபொருள்(பெட்ரோல்) விலையை 51 சதவீதம் அதிகரித்துள்ளது.

    அந்த ஒரு வருட காலகட்டத்தில், கனடா 52 சதவீதம், ஜெர்மனி 55 சதவீதம், இங்கிலாந்து 55 சதவீதம், பிரான்ஸ் 50 சதவீதம், ஸ்பெயின் 58 சதவீதம் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×