என் மலர்

  இந்தியா

  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் யோகி ஆதித்யநாத்
  X
  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் யோகி ஆதித்யநாத்

  பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத்துக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று மாலை யோகி ஆதித்யநாத் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

  இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று மாலை யோகி ஆதித்யநாத் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  இதுகுறத்து ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
  உத்தரப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையின் கீழ், மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல எனது வாழ்த்துகள்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  இதையும் படியுங்கள்.. உ.பி. முதல்வராக நாளை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடி பங்கேற்பு
  Next Story
  ×