என் மலர்

  இந்தியா

  சமையல் கியாஸ்
  X
  சமையல் கியாஸ்

  வணிக பயன்பாடு சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படவில்லை.
  புதுடெல்லி:

  சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
   
  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

  இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது.

  19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.2,040 ஆக இருந்தது. அவற்றின் விலை ரூ.105 உயர்த்தப்பட்டதன் மூலம் தற்போது ரூ.2,145.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

  Next Story
  ×