என் மலர்

  இந்தியா

  எடியூரப்பா நடிக்கும் காட்சியை விளக்கும் இயக்குனர்.
  X
  எடியூரப்பா நடிக்கும் காட்சியை விளக்கும் இயக்குனர்.

  நீட் தேர்வு குறித்த உண்மை சம்பவம் படமாகிறது: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சினிமாவில் நடிக்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எடியூரப்பா முதல்- மந்திரியாக இருந்த போது நீட் தேர்வை எழுத முடியாமல் கஷ்டப்பட்ட மாணவிக்கு உதவினார். அதன் மூலம் 350 கி.மீ. தொலைவில் இருந்தபடியே அந்த‌ மாணவி தேர்வெழுதி வெற்றி பெற்றார்.

  பெங்களூர்:

  கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. இவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு பதவியை ராஜினாமா செய்திருந்தார். பின்னர் அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கர்நாடக பா.ஜ.க.வின் மூத்த தலைவராக விளங்கும் எடியூரப்பா சினிமாவிலும் கால்பதித்து உள்ளார்.

  எடியூரப்பா முதல்- மந்திரியாக இருந்த போது நீட் தேர்வை எழுத முடியாமல் கஷ்டப்பட்ட மாணவிக்கு உதவினார். அதன் மூலம் 350 கி.மீ. தொலைவில் இருந்தபடியே அந்த‌ மாணவி தேர்வெழுதி வெற்றி பெற்றார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'தனுஜா' என்ற படம் தயாராகி வருகிறது.

  இந்த கன்னட படத்தில் எடியூரப்பா முதல் முறையாக நடிக்கிறார். அதுவும் முதல்-மந்திரி வேடத்திலேயே அவர் தோன்ற இருப்பது சிறப்பு அம்சமாகும்.

  இந்த படத்தை இயக்குனர் ஹரீஷ் எம்.டி.ஹள்ளி இயக்குகிறார். எடியூரப்பா சம்பந்தமான காட்சிகள், பெங்களூரு குமராகிருபாவில் உள்ள, ஹாவேரி இல்லத்தில் வைத்தே படமாக்கப்பட்டன. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஹரீஷ் எம்.டி.ஹள்ளி எடுத்து முடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு 90 சதவீதம் நிறைவு பெற்றிருக்கிறது.

  இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஹள்ளி கூறியதாவது:

  தனுஜா படத்தின் கதை பிடித்து இருந்ததால் உடனடியாக நடிக்க எடியூரப்பா ஒப்புக்கொண்டார். அண்மையில் எடியூரப்பா சம்பந்தமான காட்சிகளை பெங்களூருவில் உள்ள‌ குமராகிருபா அரசினர் விருந்தினர் மாளிகை, முதல்வர் இல்லமான 'காவிரி' ஆகியவற்றில் படமாக்கப்பட்டது. எடியூரப்பா சிறப்பான முறையில் நடித்தார்.

  இவ்வாறு ஹரீஷ் ஹள்ளி தெரிவித்தார்.

  ஏற்கனவே கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கவிதா லங்கேஷ் இயக்கிய படத்தில் 'சம்மர் ஹாலி டே' படத்தில் முதல்வராக நடித்தார். அந்த திரைப்படம் வெளியாகவில்லை.

  முன்னாள் முதல்வர்கள் பங்காரப்பா, ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோரும் தலா ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர். முன்னாள் முதல்வர் குமாரசாமி ஏராளமான‌ கன்னட திரைப்படங்களை தயாரித்து இருந்தாலும், ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை.

  Next Story
  ×