search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கைது
    X
    கைது

    குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.22 லட்சம் பறிப்பு- 5 பேர் கும்பல் கைது

    பேஸ்புக்கில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம் திருப்பதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், சோமலாவைச் சேர்ந்தவர் சுரேந்திரா, குர்ரம்கொண்டாவைச் சேர்ந்தவர்கள் சந்திரா, வெங்கட்ரமணா, மதனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜசேகர் ஆகிய 5 பேரும் குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும், என முகநூலில் விளம்பரம் செய்தனர்.

    அந்த விளம்பரத்தைப் பார்த்த கடப்பா மாவட்டம் ராயச்சோட்டியைச் சேர்ந்த உசேன் என்பவர் 5 பேரை தொடர்பு கொண்டு பேசி விவரங்களை கேட்டறிந்தர். அதற்கு அவர்கள், ஒரு கிலோ தங்கம் ரூ.38 லட்சம் என தகவல் தெரிவித்தனர்.

    உசேன் மற்றும் நண்பர் சைப் ஆகியோர் சேர்ந்து ரூ.22 லட்சத்தை எடுத்துக்கொண்டு 4-ந்தேதி திருப்பதிக்குச் சென்றனர். அங்கு அவர்களிடம், போலி தங்கக் கட்டியை மோசடி கும்பல் காண்பித்தனர். அந்தக் கும்பல், அவர்களை பீளேரை அடுத்த எல்லமந்தா வளைவு அருகில் வருமாறு அழைத்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று மாலை உசேன் தனியாக பீளேருக்கு வந்தார். அவரிடம் நம்பிக்கை வார்த்தைகளை கூறிய மோசடி கும்பல், தங்கத்தை ஓரிடத்தில் வைத்துள்ளோம். வாருங்கள் நடந்து சென்று தங்கத்தை எடுத்து வரலாம், எனக்கூறி ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    அந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்த ஒரு சொகுசு காரில் மோசடி கும்பல், உசேனை கடத்தி கொண்டு சினிமா பாணியில் வேகமாகக் சென்றனர். பீளேர் அருகே கார் சென்றபோது நடுவழியில் இருந்த ரூ.22 லட்சத்தை பறித்து கொண்டு அவரை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு விட்டு கும்பல் தப்பிச்சென்று தலைமறைவாகினர்.

    பணத்தை இழந்த உசேன் பீளேர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தங்க நகை மோசடி கும்பலை தேடி வந்தனர்.

    பீளேர் தொழிற்பூங்கா அருகில் பதுங்கியிருந்த மோசடி கும்பல் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சத்து 50 ஆயிரம், 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×