search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பினராய் விஜயன்
    X
    பினராய் விஜயன்

    கேரளாவில் பினராய் விஜயன் அரசு கொண்டு வந்த லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதாவில் கையெழுத்திட கவர்னர் மறுப்பு

    லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.

    இங்கு ஏற்கனவே அமலில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தில் பினராய் விஜயன் தலைமையிலான அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. இத்திருத்த மசோதாவுக்கு கேரள மந்திரி சபை கடந்த 19-ந் தேதி ஒப்புதல் வழங்கியது.

    இதையடுத்து லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது.

    இதற்கிடையே கேரள அரசு கொண்டு வந்த லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர்கள் இத்திருத்த மசோதாவில் பல தவறுகள் இருப்பதாகவும், எனவே இத்திருத்த மசோதாவை அமல் படுத்த கூடாது எனவும் கூறின.

    மேலும் இது தொடர்பாக கேரள சட்டசபையின் எதிர்கட்சி தலைவர் சதீசன், கவர்னரை சந்தித்து இது தொடர்பாக ஒரு மனுவும் கொடுத்தார். அதில் லோக் ஆயுக்தா சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என கூறியிருந்தார்.

    இதற்கிடையே லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்த சட்ட திருத்த மசோதா குறித்து சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்ட பிறகே இதில் முடிவெடுக்க உள்ளதாக கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

    ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் கவர்னருக்கும், மாநிலஅரசுக்கும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதாவிலும் கவர்னர் கையெழுத்திட மறுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×