search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
    X
    தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

    பஞ்சாப் தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீடு

    பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிட தேர்தல் வேலைகளைத் துரிதப்படுத்தி வருகின்றன. 

    இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீட்டை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க. 65 தொகுதிகளிலும், அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கட்சி 15 இடங்களில் போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×