search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 50,210 பேருக்கு கொரோனா

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் சுகாதாரத்துறையையும், கர்நாடக அரசையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளது. இதனால் தினசரி பாதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு செல்கிறது. கொரோனா முதல், இரண்டாவது அலைகளின் போது உயிரிழப்பு அதிகமாக இருந்தது. ஆனால் 3-வது அலையில் உயிரிழப்பு குறைவாக உள்ளது. ஆனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 50,210 பேருக்கு கொேரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு (2021) மே மாதம் 5-ந் தேதி கர்நாடகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்து 112 ஆக பதிவாகி இருந்தது. அதன்பின்னர் ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரமாக பதிவாகவில்லை. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கர்நாடகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளதுடன், இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 2 லட்சத்து 20 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 50 ஆயிரத்து 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 26 ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாகல்கோட்டையில் 331 பேர், பல்லாரியில் 904 பேர், பெலகாவியில் 885 பேர், பெங்களூரு புறநகரில் 925 பேர், பீதரில் 368 பேர், சாம்ராஜ்நகரில் 664 பேர், சிக்பள்ளாப்பூரில் 552 பேர், சிக்கமகளூருவில் 144 பேர், சித்ரதுர்காவில் 246 பேர், தட்சிண கன்னடாவில் 770 பேர், தாவணகெரேயில் 495 பேர், தார்வாரில் 955 பேர், கதக்கில் 274 பேர், ஹாசனில் 1,922 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஹாவோியில் 165 பேர், கலபுரகியில் 853 பேர், குடகில் 1,139 பேர், கோலாரில் 824 பேர், கொப்பலில் 510 பேர், மண்டியாவில் 1,455 பேர், மைசூருவில் 4,359 பேர், ராய்ச்சூரில் 410 பேர், ராமநகரில் 199 பேர், சிவமொக்காவில் 611 பேர், துமகூருவில் 1,963 பேர், உடுப்பியில் 947 பேர், உத்தர கன்னடாவில் 641 பேர், விஜயாப்புராவில் 249 பேர், யாதகிரியில் 151 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை 6 கோடியே 55 லட்சத்து 4 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்து உள்ளது. இதில் 35 லட்சத்து 17 ஆயிரத்து 682 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிப்பு சதவீதம் 22.77 சதவீதமாக உள்ளது.

    கர்நாடகத்தில் நேற்று கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், பெங்களூரு நகரில் 8 பேர், சிவமொக்கா, துமகூருவில் தலா 2 பேர், பல்லாரி, சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், தட்சிண கன்னடா, கதக், மைசூரு, ராய்ச்சூரில் தலா ஒருவர் இறந்தனர். 20 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

    இதுவரை 38 ஆயிரத்து 582 பேர் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்து உள்ளனர். நேற்று 22 ஆயிரத்து 842 பேர் குணம் அடைந்த நிலையில், டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 21 ஆயிரத்து 274 ஆக அதிகரித்து உள்ளது. 3 லட்சத்து 57 ஆயிரத்து 796 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் சுகாதாரத்துறையையும், கர்நாடக அரசையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    Next Story
    ×