என் மலர்

  இந்தியா

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத் தொடரானது இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
  புதுடெல்லி:

  மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

  இதற்கிடையே, பிப்ரவரி 1-ம் தேதி 2022-2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. 

  முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

  இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Next Story
  ×