என் மலர்

  இந்தியா

  ராஜ் குந்த்ரா
  X
  ராஜ் குந்த்ரா

  ஆபாச பட தயாரிப்பில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை: ராஜ் குந்த்ரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆபாச படம் வினியோகம் செய்தது தொடர்பான வழக்கிலும் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்த்ராவை கைது செய்ய கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது.
  மும்பை :

  பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இவர் ஆபாச படம் எடுத்து, அதை செல்போன் செயலி மூலம் வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலை மாதம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செப்டம்பர் மாதம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

  இதேபோல ஆபாச படம் வினியோகம் செய்தது தொடர்பான வழக்கிலும் ராஜ்குந்த்ராவை கைது செய்ய கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது.

  இந்தநிலையில் ராஜ்குந்த்ரா தன் மீதான வழக்குகள் குறித்து கூறியிருப்பதாவது:-

  நீண்ட சிந்தனைக்குப் பிறகு, பல தவறான மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் மிதந்து வருவதைக் கருத்தில் கொண்டு, எனது மவுனம் பலவீனமாக தவறாகக் கருதப்பட்டதாலும், நான் என் வாழ்நாளில் ‘ஆபாசப் படங்கள்' தயாரிப்பிலும், விநியோகத்திலும் ஈடுபட்டதில்லை என்று கூறி தொடங்க விரும்புகிறேன்.

  இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் சூனிய வேட்டை என்பதை தவிர வேறு எதுவுமில்லை. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே என்னால் விரிவாக கூற முடியாது. நான் விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. துரதிருஷ்டவசமாக நான் ஏற்கனவே ஊடகங்களால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு விட்டேன். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அதிக வலியை தந்து கொண்டு இருக்கிறது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×