search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாநிலங்களிடம் 12 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: மத்திய அரசு

    இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களிடம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஒவ்வொருவரும் இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தற்போது இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் டோஸ் எடுத்துக் கொண்ட அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் 2-வது டோஸ் முழுவதுமாக எடுத்துக் கொள்ளவில்லை. 2-வது டோஸ் செலுத்திக் கொள்ள தகுதியான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

    கோப்புப்படம்

    இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 106.79 கோடி தடுப்பூசிகள் வழங்கியுள்ளோம். தற்போது 12 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×