search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்
    X
    மின்சார ரெயில்

    பராமரிப்பு பணியால் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

    மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணியால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    மும்பை:

    மும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தானே-கல்யாண் இடையே தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி ஸ்லோ வழித்தடத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடப்பதால் மின்சார ரெயில்கள் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படுகிறது.

    இது பற்றி ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஸ்லோ வழித்தடத்தில் முல்லுண்டில் இருந்து காலை 10.43 மணி முதல் மாலை 4 மணி வரை செல்லும் மின்சார ரெயில்கள் தானே, திவா, டோம்பிவிலி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தப்படும்.

    இதேபோல மறுமார்க்கமான கல்யாணில் இருந்து காலை 10.37 மணி முதல் மாலை 3.41 மணி வரையில் மேற்குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இதேபோல துறைமுக வழித்தடத்தில் பன்வெல் முதல் வாஷி வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் பன்வெல், பேலாப்பூரில் இருந்து சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையங்களுக்கு செல்லும் மின்சார ரெயில் சேவை இயங்காது. சி.எஸ்.எம்.டி-வாஷி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் பன்வெலில் இருந்து தானே வரையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அந்த வழித்தடத்திலும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்சார ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×