search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உத்தரகாண்டில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் பலி

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லம்காகா கணவாயில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    டேராடூன்:

    உத்தரகாண்டில் உள்ள ஹர்சில் மலைப்பிரதேசத்தையும், ஹிமாச்சலப் பிரதேசம் கின்னவுர் மாவட்டத்தையும் இணைக்கும் கணவாய்களில் மிகவும் அபாயகரமானது லம்காகா கணவாய். உத்தரகாண்டில் இருந்து 17000 ஆடி உயரத்தில் உள்ள லம்காகாவில் சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் வருவது வழக்கம். இதுபோன்று மலையேற்ற வீரர்கள், சுற்றுலா பயணிகள், போர்டர்கள், வழிகாட்டிகள் என சுமார் 17 பேர் லம்காகா கணவாய் வழியே மலைபிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 18ம் தேதி அன்று அங்கு மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், வழி தவறிய 17 பேரும் கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்த தகவல் கடந்த 20ம் தேதி அன்று இந்திய விமானப் படைக்கு தெரியவந்ததை அடுத்து, ஹர்சில் மலைபிரதேசத்திற்கு இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை மீட்டு பணிக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று வீரர்கள் ஏஎல்எச் ரக விமானம் மூலம் அதகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 19500 அடி உயரத்தில் மீட்டு பணியில் ஈடுபட்டனர். இதில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

    நேற்று 5 உடல்களையும், ஒருவரை உயிருடனும் மீட்கப்பட்டன. மற்றொரு தளத்தில் மேற்கொண்ட தேடுதல் பணியில் மேலும் 2 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதுவரை மீட்கப்பட்ட 11 உடல்களையும் டோகிரா சாரணர்கள், 4 அசாம் மற்றும் ஐடிபிபி குழுக்களின் கூட்டு ரோந்து மூலம் நிதால் தாச் முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. பின், மீட்பு குழுவினர் உடல்களை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    உயிர் பிழைத்தவர்களுக்கு ஹர்சில் மலைபிரதேசத்தில் முதலுதவி அளித்த பின், உத்தரகாசியில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும், காணாமல் போன எஞ்சிய நபர்களை மீட்கும் பணியை மீட்பு குழுவினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    Next Story
    ×