search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி
    X
    ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி

    ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

    இலவச தடுப்பூசி திட்டத்தின் மூலம், சுமார் 90 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டதில் கோவின் செயலியின் பங்கு மிக முக்கியமானது என மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.  

    இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு உடல்நலம் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றார். 

    “இந்தியாவின் சுகாதார கட்டமைப்புகளில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கொண்ட ஒரு சுகாதார திட்டத்தை இன்று தொடங்குகிறோம். 3 வருடங்களுக்கு முன்பு, பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா செயல்படுத்தப்பட்டது. 
    ஆயுஷ்மான் பாரத்
     டிஜிட்டல் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

    நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா

    இலவச தடுப்பூசி திட்டத்தின் மூலம், சுமார் 90 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு கோவின் செயலியின் பங்கு மிக முக்கியமானது. பதிவு செய்வதில் தொடங்கி சான்றிதழ் வழங்குவது வரை, எந்த அமைப்பும் இந்த அளவிற்கு மிகப்பெரியதல்ல” என்றும் மோடி பேசினார்.

    Next Story
    ×