என் மலர்

  செய்திகள்

  குலாப் புயல்
  X
  குலாப் புயல்

  வங்கக்கடலில் உருவானது குலாப் புயல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கக்கடலில் குலாப் புயல் உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குலாப் பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. 

  இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.

  இந்த குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களின் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 18 குழுக்கள் முன்னெச்சரிக்கை பணிகளில் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 75-85 கிலோமீட்டரில் இருந்து 95 கிலோமீட்டர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

  Next Story
  ×