search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேற்கு வங்காளத்தில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி நான்கு பேர் பலி

    மேற்கு வங்காளத்தில் இன்று கனமழை பெய்ததால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
    மேற்கு வங்காளத்தில் இன்று காலை கனமழை பெய்தது. பெரும்பாலான இடத்தில் எதிர்பாராத வகையில் மிகக்கனமழை பெய்தது. இதனால்  பெரும்பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. குறிப்பாக வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில மழை கொட்டித்தீர்த்தது.

    மழை வெள்ளத்தால் மின்கசிவு ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 15 வயது சிறுவன் டியூசன் சென்று வீட்டிற்கு திரும்பும்போது திட்டாகார்க் என்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

    கர்தா என்ற இடத்தில் அரசு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த நபர் மனைவி மற்றும் மகனுடன் மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த நபரின் வீட்டை தண்ணீர் சூழ்ந்து இருந்தது. அப்போது மின்சார வயர் மூலம் மின்சாரம் பாய்ந்து தாக்கப்பட்டார். அவரை காப்பாற்ற அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் முயற்சி செய்தபோது மூன்று பேரும் உயிரிழந்தனர்.

    அந்த நபரின் 4-வது மகன் மட்டும் உயிர் தப்பினார். அவன் அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு உதவிக்கு அழைக்க, அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மூவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
    Next Story
    ×